‘எங்கேயும் எப்போதும்’ பட நடிகருக்கு முடிந்தது நிச்சயதார்த்தம்… மணப்பெண் இவர்தானா?… வைரலாகும் புகைப்படம் இதோ…

‘எங்கேயும் எப்போதும்’ திரைப்படத்தில் நடித்த நடிகர் சர்வானந்த்தின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சர்வானந்த். இவர்  நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. இவர் தமிழில் ‘காதல்னா சும்மா இல்லை’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது ‘எங்கேயும் எப்போதும்’ திரைப்படம் தான்.

   

இத்திரைப்படத்தில்  இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானது .இதை தொடர்ந்தவர் தமிழில் நாளை நமதே, கணம் உள்ளிட்ட பல  திரைப்படங்களில் நடித்துள்ளார்.  இதில் ‘கணம்’ திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்றே கூறலாம்.

38 வயதாகும் நடிகர் சர்வானந்த் தனது காதலியை தற்பொழுது நிச்சயதார்த்தம் செய்துள்ளார். அமெரிக்காவில் ஐடி துறையில் பணியாற்றி வரும் ரக்ஷிதா ரெட்டி என்ற பெண்ணை தான் சர்வானந்த் திருமணம் செய்து கொள்ள உள்ளார். இவர்கள் காதலித்து வந்த நிலையில் தற்போது பெற்றோர் அனுமதிவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஒரு பிரபல அரசியல்வாதியின் உறவினர் எனவும் அவரது தந்தை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் ஆக இருக்கிறார் என்றும் இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்பொழுது இவரது திருமண நிச்சயதார்த்த  புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.