நடிகர் விஜய் நடித்த ‘காதலுக்கு மரியாதை’ திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த பிரபல நடிகர்… இப்படி ஆயிருச்சே… தீயாய் பரவும் தகவல் இதோ….

‘காதலுக்கு மரியாதை’ திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் பற்றிய தகவல் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

1997 இல் நடிகர் விஜய் ஷாலினி ஹீரோ மற்றும் ஹீரோயினாக நடித்து வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ‘காதலுக்கு மரியாதை’. இத்திரைப்படத்தை இயக்குனர் பாசில் இயக்கினார். இசைஞானி இளையராஜா இசையமைத்த திரைப்படத்தின் அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் தான். நடிகர் விஜயின் திரை பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது இப்படம் என்றே கூறலாம்.

   

அந்த ஆண்டில் வெளிவந்த சூப்பர் ஹிட் படங்களில் ‘காதலுக்கு மரியாதை’ திரைப்படம் ஒன்று. இப்படத்தை தற்பொழுது ஒளிபரப்பு செய்தால் கூட சலிப்பை தட்டாது. அந்த அளவிற்கு இப்படம் பிரபலம். இந்நிலையில் காதலுக்கு மரியாதை திரைப்படம் குறித்த ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அதாவது இந்த படத்தில் நடிகர் விஜய் நடிப்பதற்கு முன்பே இயக்குனர் பாசில் வேறொரு நடிகரை நடிக்க வைக்க முடிவெடுத்துள்ளார். அந்த நடிகர் வேற யாரும் இல்லை நடிகர் அப்பாஸ் தான். இயக்குனர் பாசில் அப்பாஸின் மேனேஜருக்கு கால் செய்து கால்ஷீட் கேட்டு உள்ளார்.

ஆனால் அப்பாஸின் மேனேஜர் நடிகருக்கு தெரியாமல் இப்படத்திற்கு நேரம் ஒதுக்காமல் வேறு படங்களுக்கு கால்சீட் கொடுத்துள்ளார். படம் ரிலீஸ் ஆனதன் பிறகு நடிகர் அப்பாஷிற்கு இந்த விஷயம் தெரிய வந்ததாம். இதனை நடிகர் அப்பாஸ் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.