அசால்ட்டாக குளத்திற்குள் இறங்கி… யானையை குளிப்பாட்டிய பிரபல நடிகை… வைரலாகும் வீடியோ… டிரெண்டாக்கும் ரசிகர்கள்…

பிரபல பாலிவுட் நடிகையான அதா ஷர்மா கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த 1920 எனும் ஹாரர் படத்தின் மூலம் பிரபலமானவர். அப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது எனலாம். இதைத்தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி , தமிழ் என பல மொழிகளில் நடித்து பிரபலமானார்.

   

இவர் தமிழில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி இணைந்து நடித்த ‘சார்லி சாப்ளின் 2’ திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2014ல் வெளியான Hasee Toh Phasee படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இதனையடுத்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி பல படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் அதா ஷர்மா தனது பள்ளிப்படிப்பை முடித்த உடனே நடிக்கத் தொடங்கி விட்டாராம் நடிகை அதா சர்மா. இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்த அவர் தமிழில் ‘சிம்புவின் இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடல் காட்சியில் டான்ஸ் ஆடியுள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்க கூடியவர் நடிகை அதா சர்மா.

இவர் அவ்வப்பொழுது தனது ஹாட் புகைப்படங்களையும், சாகச விடீயோக்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார். இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது அசால்ட்டாக குளத்தில் இறங்கி யானையை குளிப்பாட்டும் வீடியோ ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதனை இணையத்தில் ட்ரென்டாக்கி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Adah Sharma (@adah_ki_adah)