‘வடிவேலுவால் தான் என் வாழ்க்கையே போனது’ ஆவேசமாக பேட்டியளித்த பிரபல காமெடி நடிகர்… வைரலாகும் வீடியோ… அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில்  ‘வைகைப்புயல்’ என அழைக்கப்படும் வடிவேலு அவர்கள் தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர். தனக்கென்று தனி பாணியை நகைச்சுவையில் ஏற்படுத்திக் கொண்டவர். 1991 இல்’ என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தில் முதன் முதலாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார் .

   

நடிகர் வடிவேலு தற்பொழுது ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படத்தில் கதாநாயகனாக  நடித்துக் கொண்டு வருகிறார். இதைத்தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துக் கொண்டு வருகிறார்.

இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் சிசர் மனோகர் நடிகர் வடிவேலுவை பற்றி கூறிய பேட்டி ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் சிசர் மனோகர். இவர் முதலில் தயாரிப்பு உதவியாளராக தான் பணியாற்றி இருந்தார். அதற்கு பின்னர்  ‘கோகுலத்தில் சீதை’ திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார்.

அதை தொடர்ந்து இவர் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இவர் இதுவரை 240க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சமீப காலமாக பெரிதாக இவருக்கு சினிமா பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. தற்பொழுது அவர் நடிகர் வடிவேலுவை பற்றி அளித்திருக்கும் பேட்டியில் கூறியுள்ளதாவது ‘வடிவேலுவால் தான் என் வாழ்க்கை போனது.  வடிவேலுக்கு ஆரம்பத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததே நான் தான்.

ஆனால், அவர் எனக்கே ஆப்பு வைத்து விட்டார். பகவதி படத்தில் இன்னொரு வடிவேலுவாக நான் நடிக்க வேண்டியது. அது மட்டும் இல்லாமல் வடிவேலுவால் தான் எனக்கு நிறைய படம் போனது.மேலும், அவர் இந்த நிலைமையில் நல்லா இருப்பதற்கு காரணமும் நான் தான். ஆனால், அவர் என் வாழ்க்கையில் விளையாடிவிட்டார்.

அடுத்தவங்க வாழ்க்கையில் அவர் ஏன் தலையிடுகிறார்? என்று தெரியவில்லை. பகவதி படத்தின் போதே நான் வடிவேல் மீது கடும் கோபத்தில் இருந்தேன். நம்ம வளர்த்த ஆளு, நாம வாய்ப்பு வாங்கி கொடுத்தோம். ஆனால், நமக்கே அவர் வாய்ப்பு கிடைக்காமல் பண்ணுறாரு நினைத்து எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது.

அவருடன் நான் சேர்ந்து நடிக்க வில்லை. கடைசியாக ‘இம்சை அரசன்’ படத்தில் சிம்புதேவன் ஒன்னா நடிக்க காரணமாக இருந்தார். அந்தப்படத்திலும் எனக்கு இருந்த நிறைய சீன்களை கட் பண்ணது வடிவேல் தான். நான் அடுத்த கட்டத்துக்கு போய்விட கூடாது என்று தான் இவர் இந்த வேலையை பார்த்து இருக்கிறார்’ என்று பல விஷயங்களை மனம் திறந்து கூறியுள்ளார் சிசர் மனோகர். இவரின் இந்த பேட்டியானது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதோ அந்த வைரல் வீடியோ…