‘தாலியுடன் மேடைக்கு வந்து என்ன கல்யாணம் செஞ்சுக்குறீங்களா?’ எனக் கேட்ட பெண் ரசிகை… ரசிகர்கள் சந்திப்பில் மிரண்டு போன நடிகர் அசோக் செல்வன்… யார் இவர் தெரியுமா?…

‘சூது கவ்வும்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன். அப்படத்தில் சைடு ரோலில் நடித்த இவர். இதையடுத்து பீட்சா 2 வில்லா படம் மூலம் ஹீரோவாக காலடி எடுத்து வைத்தார். இதையடுத்து தெகிடி, கூட்டத்தில் ஒருத்தன், ஓ மை கடவுளே, மனமதலீலை, சில நேரங்களில் சில மனிதர்கள் என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்தார் அசோக் செல்வன்.

   

கடந்தாண்டில் அதிக தமிழ் படங்களில் நடித்த ஹீரோவும் அசோக் செல்வன் தான். 2022-ம் ஆண்டில் மட்டும் இவர் ஹீரோவாக நடித்த சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மதலீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம் என 5 தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகின. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இது ஒவ்வொன்றும் வெவ்வேறு ஜானர்களை கொண்ட படமாகும்.

தற்போது அசோக் செல்வன் கைவசம் ஏராளமான படங்கள் உள்ளன. குறிப்பாக பா.இரஞ்சித் தயாரிக்கும் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார் அசோக். இப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து தயாராகி வருகிறது. இதில் அவருடன் சாந்தனுவும் மற்றொரு ஹீரோவாக நடிக்கிறார். இதுதவிர ‘நெஞ்சமெல்லாம் காதல்’ என்கிற படத்தையும் கைவசம் வைத்துள்ளார் அசோக் செல்வன்.

நடிகர் அசோக் செல்வனுக்கு தற்பொழுது 33 வயதாகிறது. இதுவரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவ்வப்பொழுது இவரது திருமணம் குறித்த வதந்திகளும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சமீபத்தில்பிரபல சேனல் ஒன்று நடத்திய ஃபேன்ஸ் மீட்டிங்கில் கலந்து கொண்ட நடிகர் அசோக் செல்வனிடம், அவரது ரசிகை ஒருவர் ‘என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?’ என்று தாலியுடன் கேட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதோ அந்த வைரல் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Galatta Media (@galattadotcom)