அச்சு அசலாய் சில்க் ஸ்மிதாவை போலவே இருக்கும் பெண்… அதே முகம் அதே expression… ஒருவேளை மறுபிறவியா இருக்குமோ?… 

நடிகை சில்க் ஸ்மிதா இந்த பெயரை கேட்டாலே சொக்கிப் போவோர் ஏராளம். இதற்கு காரணம் அவரின் சொக்க வைக்கும் கண்கள், செக்கச் சிவந்த இதழ்கள், கிறங்கடிக்கும்  கவர்ச்சியே. 80 களில் தொடங்கி 90 வரை தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவர் தனது 17 ஆண்டு கால சினிமாவில் தமிழ், ஹிந்தி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

   

தமிழில் வினுச்சக்கரவர்த்தி அவர்களால் ‘வண்டிச்சக்கரம்’ என்ற திரைப்படத்தில் ‘சில்க்’ என்கிற சாராயக்கடையில் பணிபுரியும் பெண் கதாபாத்திரத்தில் முதன்முதலாக நடித்தார். இதைத்தொடர்ந்து  திரையுலகின் கனவு கன்னியாக வலம் வந்த இவர் 1996 இல் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

இவர் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்னும் அவருடைய பெயரை கேட்டாலே ரசிகர்கள் மத்தியில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்றே கூறலாம். இவருடைய வாழ்க்கை வரலாறு ஹிந்தியில் ‘தி டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாக எடுக்கப்பட்டது. இதுவரை எத்தனையோ கவர்ச்சி நடிகைகள் தமிழில் வந்து விட்டார்கள்.

ஆனால் யாராலும் நடிகை சில்க் ஸ்மிதாவின் இடத்தைப் பிடிக்க முடியவில்லை. தற்பொழுது சமூக வலைத்தளங்களில் சில்க் ஸ்மிதாவை போன்று இருக்கும் ஒரு பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘ஒருவேளை அவர் சில்க் ஸ்மிதாவின் மறுபிறவியோ’ என்று குழம்பி வருகின்றனர். இதோ அந்த வைரல்  வீடியோ…