‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய முக்கிய பிரபலம்.. அடடே இவரா.. வருத்தத்தில் புலம்பும் ரசிகர்கள்..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் ரியாலிட்டி ஷோகளில் ஒன்று குக் வித் கோமாளி. ஒரு சமையல் நிகழ்ச்சியை இந்த அளவிற்கு கலகலப்பாகவும், காமெடியாகவும் மாற்ற முடியும் என்பதை இந்நிகழ்ச்சி நிரூபித்து காட்டி வருகிறது. டிஆர்பி யில் தொடர்ந்து முன்னணி இடத்தையும் பிடித்து வருகிறது இந்த ஷோ.

   

மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசன்களை கடந்து தற்பொழுது 4வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் இருந்து சமீபத்தில் கோமாளியாக கலக்கி வந்த மணிமேகலை திடீரென்று விலகினார். இதற்காக அவர் எந்த காரணங்களும் குறிப்பிடவில்லை. மூன்று சீசன்களிலும் கோமாளியாக அசத்தி வந்த சிவாங்கி,

தற்போது குக்காக மாறி சூப்பராக சமைத்து வருகின்றார். இவரது ரசிகர்கள் சிவாங்கி குக் வித் கோமாளி டைட்டிலை வெல்ல வேண்டும் என்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கடுமையான போட்டிகள் நடைபெற்று வரும் இந்த வேளையில், இந்த வார நிகழ்ச்சியை விட்டு யார் வெளியேற்றப்படுவார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்நிலையில் ராஜா ஐயப்பன் என்ற போட்டியாளர்தான் தற்பொழுது வெளியேறி உள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இத்தகவல் உண்மையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இத்தகவலை அறிந்த அவரது ரசிகர்கள் வருத்தத்தில் புலம்பி வருகின்றனர்.