‘வைகைப்புயல்’ வடிவேலின் வீட்டில் மரணம் அடைந்த முக்கிய நபர்…. இவரா?… சோகத்தில் மூழ்கிய குடும்பம்… ஆறுதல் தெரிவிக்கும் ரசிகர்கள்….

காமெடி நடிகர் வடிவேலுவின் தாயார் நேற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. இவரை அவரது ரசிகர்கள் ‘வைகை புயல்’ என்று கொண்டாடி வருகின்றனர். இவரது காமெடியை சிறுவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் ரசித்து பார்க்கின்றனர் .அவரது காமெடி காட்சிகளை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ் இன்றும் உலா வந்து கொண்டுதான் உள்ளது .

   

ஃப்ரெண்ட்ஸ், வின்னர், சச்சின், சந்திரமுகி, மருதமலை, கிரி போன்ற எண்ணற்ற  படங்கள் இவர் நடிப்பில் வெளியாகின. தனக்கென்று தனி பாணியை நகைச்சுவையில் ஏற்படுத்திக் கொண்டவர். 1991 இல்’ என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தில் முதன் முதலாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார் . இப்படத்தில் அவர் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார். ‘போடா போடா புண்ணாக்கு’ என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆனது.

இவர் நடிப்பில் அண்மையில் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம் வெளிவந்தது. எதிர்பார்த்த அளவிற்கு அப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இதைத்தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துக் கொண்டு வருகிறார்.

தற்பொழுது நடிகர் வடிவேலுவின் வீட்டில் ஒரு சோகம் ஏற்பட்டுள்ளது. அதாவது 87 வயதாகும் அவரது  தாயார் சரோஜினி பாப்பா மதுரை விரகனுரில் நேற்று இரவு உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து நடிகர் வடிவேலுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.