‘மாமன்னன்’ திரைப்படத்தில் சிறுவயது அதிவீரனாக நடித்த சூர்யாவுக்கு  லேப்டாப் வழங்கிய அமைச்சர்… வெளியான அழகிய புகைப்படங்கள்…

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மாமன்னன் படமே தன் கடைசி படம் என அறிவித்தார். இதனால், இப்படம் குறித்த எதிர்பார்ப்புகள் வெகுவாக அதிகரித்தன. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மாமன்னன் திரைப்படம் வெளியானது.

   

இபபடத்திற்கு இருந்த எதிர்பார்ப்பின் காரணமாக முதல் நாள் முதலே பெரும் வரவேற்பைப் பெற்று, வசூலைக் குவித்து வருகிறது. மாமன்னன் படத்திற்கு சில நெகட்டிவ் விமர்சனங்களைத் தாண்டி பொதுவான ரசிகர்களின் ஆதரவினால் மாமன்னன் திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

மாமன்னன் திரைப்படம் பேசும் அரசியல் சமூக தளங்களில் விவாதங்களுக்கு உள்ளாகி வருகிறது. அரசியல் பிரமுகர்கள் பலரும் மாமன்னன் திரைப்படத்தைப் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், மாமன்னன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

தற்பொழுது இத்திரைப்படத்தில் சிறு வயது அதிவீரனாக நடித்த நடிகர் சூர்யாவுக்கு அவரது படிப்பிற்கு உதவும் வகையில் லேப்டாப் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். மேலும் அவரது கல்விக்கும் வளர்ச்சிக்கும் என்றும் துணையாக இருப்போம் என்றும் கூறியுள்ளார். தற்பொழுது இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.