சூப்பர் ஸ்டார் படத்தோடு மோதிய லவ்வர் படம்.. தியேட்டரில் ரசிகர்களோடு ஆனந்த கண்ணீரீல் படத்தின் ஹீரோ..!!

நடிகர் சூர்யா நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெய் பீம்’ . இப்படத்தில் ராசாக்கண்னு என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் தான் நடிகர் கே மணிகண்டன். இவர் ஆரம்பத்தில் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றினார். அப்போது பல படங்களுக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் டப்பிங் செய்துள்ளார்.

   

இவர் பீட்சா II: வில்லா என்ற திரைப்படத்தில் எழுத்தாளராக திரையுலகில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு வெளியான’ இந்தியா பாகிஸ்தான்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெயர் வாங்கி தந்த படம் என்றால் அது ‘ஜெய் பீம்’ தான். ரஜினி நடிப்பில் வெளியான லால் சலாம் படத்துடன் லவ்வர் படம் மோதியதாக கூறப்படுகிறது.

லால் சலாம் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? | Tamil Cinema News Lal Salaam collection update

அதன் பிறகு’குட் நைட்’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து புது அவதாரம் எடுத்தார். இந்நிலையில் அறிமுக இயக்குனர் பிரபு ராம் என்பவரின் இயக்கத்தில் ‘லவ்வர்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த 9ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. இது அதிகப்படியான பொசசிவ்னஸ் காரணமாக காதலில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதையடுத்து காதலை முறிக்க முடிவெடுக்கும் நாயகி, அதிலிருந்து மீள நினைக்கும் காதலன் என இந்த படம் கதைக்களத்துடன் சிறப்பாக உள்ளது. நடிகை ஸ்ரீகௌரி பிரியா இப்படத்தின் ஹீரோனியாக நடித்துள்ளார்.

Actor Manikandan and lover team gets lots of response from the audience towards theatre visit of Lover movie

மேலும் நடிகர் மணிகண்டனுடன் இணைந்து திரையரங்கில் லவ்வர் படத்தை பார்த்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த படத்தின் கதை, தற்போதைய இளைஞர்களின் காதலை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.