சினிமாவிற்காக தன் பெயரை மாற்றிக் கொண்ட முஸ்லிம் நடிகர் மற்றும் நடிகைகள் யார் தெரியுமா?..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் மற்றும் நடிகைகள் உண்மையான பெயர் பற்றி இதில் காண்போம்.

1.ஆர்யா:

   

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர்  நடிகர் ஆர்யா. இவர் சமீபத்தில் வெளியான காதர் பாட்ஷா என்கின்ற முத்துராமலிங்கம் என்ற படத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.இவர் தற்போது ‘மிஸ்டர் எக்ஸ்’ என்ற ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார். நடிகர் ஆர்யாவின் உண்மையான பெயர் ஜம்ஷத்.

2.ராஜ்கிரண்:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் ராஜ்கிரண் இவர்  இவர் இறுதியாக 2022 ஆம் ஆண்டு வெளியான பட்டத்து அரசன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவரின் உண்மையான பெயர் மொய்தீன் அப்துல் காதர்.

3.ஷ்யாம்:

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் ஷ்யாம். இவர் இறுதியாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தின் அஜய் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரின் உண்மையான பெயர் சம்சுதீன் இப்ராஹிம்.

4.மம்முட்டி:

மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் மம்முட்டி. இவர் தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவருடைய உண்மையான பெயர் முஹம்மது குட்டி பனபரம்பில் இஸ்மாயில்.

5.சத்யா:

புத்தகம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சத்யா.இவர் தமிழில்  அமரகாவியம் , எட்டுத்திக்கும் மதயானை  போன்ற பட படங்களில்  நடித்துள்ளார். இவர் நடிகர் ஆர்யாவின் தம்பி  இவருடைய உண்மையான பெயர் ஷாகிப்.

6.அஜ்மல் அமீர்:

கோ’ படத்தின் மூலமாக பிரபலமான நடிகர் அஜ்மல் அமீர். இவர் தற்போது  பிசாசு 2 திரைப்படத்தில்  நடித்து வருகிறார்.

7.நதியா:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை நதியா.இவர் ‘எல் ஜி எம்’ என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருடைய உண்மையான பெயர் சரீனா அனுஷா.

8.சதா:

‘ஜெயம்’ திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை சதா இவருடைய உண்மையான பெயர் சதாஃவ் முகமது சையது.

9. பூர்ணா:

முனியாண்டி  திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை  பூர்ணா இவருடைய உண்மையான பெயர் ஷம்னா காசிம்.