நடிகர் கமலஹானுடன் நடிக்க இதுதான் காரணமா….உண்மையை உடைத்த நடிகை அபிராமி…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபல முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை அபிராமி. இவர் ‘வானவில்’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் இவருடன் அர்ஜுன் பிரகாஷ்ராஜ் போன்ற பிரபல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற படங்களிலும்  நடித்துள்ளார்.

   

நடிகர் பிரபுவுடன் இணைந்து மிடில் கிளாஸ் மாதவன், சார்லி சாப்ளின் போன்ற பல திரைப்படங்களில் நடித்து நடித்துள்ளார். என்னதான் நடிகர் பிரபுவுடன் இணைந்து  பணியாற்றினாலும் பிரபுவின் தந்தையான சிவாஜி ஒருமுறை கூட பார்க்க  வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் நடிகர் சரத்குமார் உடன் இணைந்து சமுத்திரம் ,சமஸ்தானம் தோஸ்த் போன்ற பல படங்களில்  நடித்துள்ளார் .சமீபத்தில் கூட  36 வயதினிலே, மாறா போன்ற திரைப்படங்களிலும் ஏராளமான மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை அபிராமி நடிகர் கமலஹாசன் உடன் இணைந்து விருமாண்டி படத்தில் நடித்திருந்தார்.ஆனால் இப்போது வரை இவருக்கு எதற்காக இப்படத்தில் கமல் தன்னை தேர்வு செய்தார் என தெரியவில்லையாம். அதை பற்றி நடிகர் கமலஹாசனிடம் கேட்ட பொழுது ஒருமுறை நடிகர் கமலஹாசன் மதுரை ஜல்லிக்கட்டுக்கு  சென்றதாகவும் அப்போது அங்கு ஒரு பெண் கம்பீரமாக கண்ணாடி அணிந்து உட்காந்திருத்ததாகவும் அதனை கண்டதும் இந்த கதாபாத்திரத்திற்கு அபிராமி சரியாக இருப்பார் என தோன்றியதாகவும் கூறியுள்ளார்.

நடிகை அபிராமிக்கு தமிழ் சினிமா நடிகர்கள் அனைவருடனும் நடிக்க வேண்டும் என்று விருப்பமா இவர் அவர் இல்லை எனக்கு இந்த விஷயத்தில் என்று கூறியுள்ளார் .மேலும் இவர் தான் இறக்கும் வரை சினிமாவில் நடிப்பது தான் என்னுடைய ஆசை என்றும் கூறியுள்ளார். தற்போது இந்த செய்தியானது ரசிகர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.