வித்தியாசமான கெட்டப்பில் விக்ரம்.. பிரம்மாண்டமாக தொடங்கிய வீரதீர சூரன் படத்தின் ஷூட்டிங். வைரலாகும் கிளிக்ஸ்..!!

பிரபல நடிகர் ஆன விக்ரமின் 62-ஆவது படம் தான் வீர தீர சூரன். இந்த படத்தில் விக்ரம், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

   

விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தில் டைட்டில் ப்ரோமோ உடன் வெளியானது. வீர தீர சூரன் படத்தின் டைட்டில் டீசர் சுமார் 8 மில்லியன் வியூஸை கடந்தது.

வீர தீர சூரன் படத்தை சிபு தமின்ஸ் தயாரிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் விக்ரம் 3 தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே சூர்யாவும் நடிக்கிறார்.

நேற்று படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. இந்த நிலையில் விக்ரம் உள்ளிட்ட பட குழுவினர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் வீடியோ வெளியானது.

சூட்டிங் ஸ்பாட் வீடியோவில் விக்ரம் கிராமத்து கெட்டப்பில் இருந்துள்ளார். அந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் வீர தீர சூரன் படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதே நேரம் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான் படமும் கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்த துருவ நட்சத்திரம் படமும் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.