திடீரென ஏற்பட்ட விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்… விலா எலும்புகள் உடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி… சோகத்தில் ரசிகர்கள்…

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் அமிதாப்பச்சன். இளம் நடிகர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் தற்பொழுதும் திரைப்படங்களில் கலக்கி வருகிறார். இவர் தற்போது பிரபாஸ் நடிக்கும் ‘ப்ராஜெக்ட்’ கே படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படம் தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் உருவாகிறது.

   

இந்த நிலையில் படத்தின் ஒரு ஆக்‌ஷன் காட்சியின் போது அமிதாப்பச்சனுக்கு விலா எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதாவது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் ‘ப்ராஜெக்ட் கே’ படத்தில் இடம்பெறும் முக்கிய சண்டைக்காட்சியை படமாக்கியுள்ளனர்.

அந்த சண்டை காட்சியில் நடித்த அமிதாப்பச்சனுக்கு திடீரென விபத்து ஏற்பட்டு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டார் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். மேலும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது விலா எலும்புகள் முறிந்து இருப்பதாகவும்,  சில நாட்கள் ஓய்வில் இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு அவர் மும்பையில் உள்ள தன்னுடைய இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார்.இதுகுறித்து தன்னுடைய இணையதளத்திலும் அமிதாப்பச்சன் பதிவிட்டுள்ளார். மேலும் தன்னை பார்க்க ரசிகர்கள் யாரும் வர வேண்டாம் எனவும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்பொழுது இத்தகவலை அறிந்த ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.