தன் குழந்தைக்காக அமலாபால் செய்த காரியம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை தான் நடிகை அமலாபால். இவர் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘மைனா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.அதை தொடர்ந்து நிமிர்ந்து நில்,தலைவா, தெய்வ திருமகள், வேலையில்லா பட்டதாரி போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.நடிகை அமலா பால் இயக்குனர் எ.ல் விஜய் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.அதன் பிறகு ஒரு சில காரணங்களால் இருவரும்  விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

   

 

அதன் பிறகு ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு  நடிகை அமலா பால் ஜகத் தேசாய் என்பவரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். சிறிது மாதத்திற்கு முன்பாக அவர் தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்து இருந்தார்.சமீபத்தில்  நடைபெற்ற ஆடுஜீவிதம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நிறை மாத கர்ப்பிணியாக வந்து கலந்துக் கொண்டார்.இப்படம் வெளியாகி ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து வருகிறது.

அதன் பிறகு  இவர்  நடிப்பில் அடுத்து’ லெவல் க்ராஸ்’ என்ற படம் வெளியாக உள்ளது. 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் அமலா பால் புதிதாக எதாவது முயற்சி செய்ய வேண்டும் என்ற ஆர்வத்திலும்தனது குழந்தைக்கு பரிசாக அளிக்கவும் தற்போது பின்னணி பாடகி அவதாரம் எடுத்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைபபில்அமலா பால் குரலில் வெளியாகியுள்ள இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.