‘திருமணம்’ சீரியல் நடிகர் தீபக் குமாரின் மனைவி ஒரு பிரபல சீரியல் நடிகையா!!! வெளியான அழகிய புகைப்படங்கள்…

இன்றைய காலகட்டத்தில்  சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அந்த வகையில் கலர்ஸ் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான சீரியல்  ‘திருமணம்’ .

   

இந்த சீரியலை இயக்குனர் அழகர் பெருமாள் இயக்கியுள்ளார். இந்த சீரியலில் சித்து,  ஸ்ரேயா,  இந்துமதி ,சிவலிங்கம்,  தீபக்,  தீனா,  மனோஜ் குமார், பிரீத்தி,  ரேகா போன்ற பல பிரபலங்கள் சீரியலில் நடித்துள்ளனர்.

இந்த சீரியலில் நவீன் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகர் தீபக் .இதை தொடர்ந்து இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான என்றென்றும் புன்னகை என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

நடிகர் தீபக் குமார் சீரியல் நடிகையான அபிநவ்யா காதலித்து திருமணம் செய்து கொண்டனர்  இவர் சித்திரம் பேசுதடி, கண்மணி, பிரியமானவள், சிவா மனசுல சக்தி போன்ற பல் தொடர்களில் நடித்து இருக்கிறார்.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் கயல் சீரியலில் நடித்துள்ளார்.  இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.  இவர்சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர்.

அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.  இவர்களின் குடும்ப புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகிஉள்ளது.