இவருக்கு கல்லூரி செல்லும் வயதில் மகளா?…. டாப் 10 மூவிஸ் புகழ் சுரேஷ் குமாரின் குடும்ப புகைப்படம் இதோ உங்களுக்காக…!!!

90ஸ் கிட்ஸ் ஃபேவரிட் ஷோ  பல உள்ளது அதில் இதைக் கூறியே ஆக வேண்டும்.  அதுதான் டாப் 10 மூவிஸ்.  தற்போது யூடியூபில் பல சேனல்கள் வந்துவிட்டது ஒரு புதிய படம் வெளியான அடுத்த நொடியே விமர்சனங்கள் கூறுவதற்கு, ஆனால் ஒரு காலகட்டத்தில் சன் டிவியில், ஒரு படத்திற்கான ரேட்டிங் கொடுத்து அதை டிவியில் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பார்கள்.

   

அதை மிகவும் கோர்வையாக தொகுத்து வழங்குபவர் தான் தொகுப்பாளர் சுரேஷ்குமார் இந்த நிகழ்ச்சியில் அவருக்கு என்று பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்றும் பலர் அவரை மிஸ் செய்யும் ரசிகர்கள் அவரை தனது இன்ஸ்டா பக்கங்களில் பாலோ செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் இவர் தற்பொழுது சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக உள்ளார். மேலும் இவர் ஒரு மருத்துவர் என்பதும் மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த  நிலையில் டாப் டென் மூவிஸ் சுரேஷ்குமார் அவர்களுக்கு திருமணம் ஆகி கல்லூரி செல்லும் வயதில் மகளும் உள்ளாராம், அவர் மனைவி தமயந்தி, தற்போது அவரின் குடும்ப புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிறது.