நாங்க ரெண்டு பேரும் பக்கத்து வீடு..அவருடைய கேரக்டர் இப்படித்தான்… !!காதலன் குறித்து மனம் திறந்த திரிஷா..?

நடிகை திரிஷா, நடிகர் ராணா பற்றி புகழ்ந்து கூறியிருக்கிறார்.

தமிழ் திரையுலகில் 20 வருடங்களுக்கு மேல் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை திரிஷா. அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்து விட்டார். தற்போது விஜய்யுடன் இணைந்து லியோ திரைப்படத்திலும், அதை தொடர்ந்து அஜித்துடன் விடாமுயற்சி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

   

திரிஷா தயாரிப்பாளர் வருணை காதலித்தார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். அதனை தொடர்ந்து நடிகர் ராணாவும், திரிஷாவும் காதலிப்பதாகவும் தகவல் பரவி வந்தது. இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களும் வெளியானது.

அதன்பிறகு, அந்த காதலும் முறிந்தது. இந்நிலையில், நடிகை திரிஷா ராணா குறித்து கூறிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அவர் கூறியதாவது, ராணாவிடம் நிறைய நல்ல குணங்கள் இருக்கின்றன. மனிதர்களை மதிக்க தெரிந்தவர். நல்ல நண்பர். அவர் என் பக்கத்து வீட்டுக்காரர் தான். எனக்கு பல வருடங்களாக அவரை தெரியும். ராம நாயுடு குடும்பத்தை சேர்ந்தவர் என்ற தலைக்கனம் இல்லாமல், இயல்பாகவே இருப்பார் என்று கூறியிருக்கிறார்.