TRPயில் முதன்முறையாக கீழே இறங்கிய சன் டிவி.. முதல் இடத்தை பிடித்த விஜய் டிவி

பல ஆண்டுகளாக சீரியலுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது சன் தொலைக்காட்சி தான். தொலைக்காட்சிகளில் சன் மற்றும் விஜய்க்கு தான் கடும் போட்டி நடக்கிறது. பல வருடங்களாக சன் டிவி தான் முதல் இடத்தில் உள்ளது, அந்த இடத்தை பிடிக்க தான் மற்ற டிவிக்கள் போராடி வருகிறார்கள். அந்த போராட்டத்தில் விஜய் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது என்றே கூறலாம். படங்களில் எப்படி பாக்ஸ் ஆபிஸ் சண்டை நடக்கிறதோ அதேபோல் தொலைக்காட்சிகளில் TRPக்காக சண்டைகள் நடந்து கொண்டேதான் உள்ளது.

   

மேலும் முதல் இடத்தை பிடிக்க வேண்டுமென போராடி வருகிறார்கள், நிறைய புத்தம் புதிய நிகழ்ச்சிகள், சீரியல்கள் என ஒளிபரப்பி வருகிறார்கள். அத்தோடு எப்போதும் முதல் இடத்தில் சன் தொலைக்காட்சியின் சீரியல்கள், படங்கள் தான் இருக்கும். இப்போது தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதன்முறையாக சன் தொலைக்காட்சியை வீழ்த்தி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது விஜய் தொலைக்காட்சி.

மேலும் கடந்த வார TRP ரேட்டிங்கில் விஜய் தொலைக்காட்சியின் பாரதி கண்ணம்மா சீரியல் அதிக TRP ரேட்டிங் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று தான் பாரதிகண்ணம்மா.