பொதுவாக பைக் ப்ரியர்களுக்கு பிடித்தமான வாகனம் எது எனக் கேட்டால் உடனே புல்லட் பைக்கைத்தான் சொல்வார்கள். எவ்வளவு லாங் டிராவல் செய்தாலும் புல்லட் பைக்கில் அலுப்பே தட்டாததும் இதற்கு ஒரு காரணம்.
புல்லட் பல பைக் ப்ரியர்களின் கனவும் கூட! புல்லட் வாங்க வேண்டும் என்பது பலரது விருப்பமாக உள்ளது. அதேநேரத்தில் டிவிஎஸ் எக்ஸ்.எல் பைக்கைப் பொறுத்தவரை லோ பட்ஜெட்டில் பைக் வாங்க விரும்புவோருக்கு அது ஒரு நல்ல சாய்ஸ்.
அதேபோல் பெரும்பாலும் பலரசரக்குக் கடை வைத்திருப்பவர்கள் அதிக லோடு ஏற்ற முடியும் என்பதால் இந்த ஸ்கூட்டரையே அதிகம் வைத்திருப்பார்கள். பொதுவாக நாம் புல்லட்டையும், டிவிஎஸ் எக்ஸ் எல்லையும் கம்பேர் செய்யவே முடியாது. புல்லட் மலை என்றால்,
அதற்கு முன்பு டிவிஎஸ் எக்ஸ் எல் வெறும் கொசு என்றுதான் நாம் நினைப்போம். ஆனால் இந்த டிவிஎஸ் எக்ஸ் எல் நேருக்கு, நேர் மோதியதால் புல்லட் பைக்கின் முன்பகுதி சுக்கு நூறாக உடைந்துள்ளது. இதுதொடர்பான காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.