என்ன மனுஷன் யா இவரு… இறந்து இரண்டு மாதத்திற்கு பிறகு தன் ரீல் மகளுக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்து கூறும் மாரிமுத்து…

சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது .அந்த வகையில் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற சீரியல் தான் ‘எதிர்நீச்சல்’. இந்த சீரியலில் ஆணாதிக்கம் உள்ள ஒரு வீட்டில் பெண்கள் எவ்வாறு எல்லாம் பிரச்சனை சந்திக்கின்றன அதில் இருந்து எவ்வாறு மீண்டு வருகின்றனர் என்பதே இந்த சீரியலின் மையக் கருத்தாக உள்ளது.

   

இந்நிலையில் இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர்  நடிகர் மாரிமுத்து சமீபத்தில் மாரடைப்பின் காரணமாக இறந்தார். அதன் பிறகு  இவரின் கதாபாத்திரத்திற்கு நடிகர்  வேலராம மூர்த்தி  நடித்தித்து வருகிறார்.தற்போது  இந்த சீரியல் வாரத்துக்கு வாரம் டி ஆர் பி  அடி வாங்கி வரும் நிலையில், இந்த சீரியலில் இவரின்  மகள் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை  மோனிஷா .நடிகை  மோனிஷாவிற்கு நடிகர் மாரிமுத்து இறக்கும்  முன் ஒரு வீடியோவை அனுப்பி வைத்துள்ளார்.

அதாவது நடிகை மோனிஷாவிற்கு பிறந்தநாள் என்று எண்ணி மாரிமுத்து ஒரு வீடியோ அனுப்பி இருக்கிறார் அதன் பிறகு தான் மோனிஷாவிற்கு பிறந்தநாள் இல்லை என்று தெரிந்ததும் உன் பிறந்த நாளுக்கு அட்வான்ஸ் ஆக வைத்துக் கொள் என்று கூறினாராம் மாரிமுத்து.தற்போது இன்று நடிகை மோனிஷாவிற்கு பிறந்தநாள் ஆனால் மாரிமுத்து உயிரோடு இல்லை முன்பு அவர் அனுப்பிய வீடியோ தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ ஆனது இணையத்தில் வைரலாகி வருகிறது.