இயக்குனர் சூர்யபிரகாஷ் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளியான படம் ‘மாயி’. இப்படத்தில் சரத்குமார், மீனா, வடிவேலு, விஜயகுமார், தீபா, வரலட்சுமி, சபிதா ஆனந்த், மனோரம்மா, கோவை சரளா போன்ற பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ எஸ் ராஜ்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் வா மா மின்னல் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை தீபா. இந்த படத்திற்கு பின்னர் மின்னல் தீபா என்று அழைக்கப்பட்டார்.
இவர் தமிழன் ரன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஜீ தமிழ் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ சீரியல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார்.
நடிகை தீபா 2013 ஆம் ஆண்டு ரமேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.அதன் பிறகு இருவரின் கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து பெற்றனர்.
சில நாட்களுக்கு பிறகு நடிகை தீபா சுப்பிரமணியம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு இவர்கள் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளது.