
உலகில் உள்ள பல்வேறு இடங்களில் ஏதேனும் ஒரு அதிசய நிகழ்வு ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அவை வீடியோக்களாக வெளிவந்து இணையதளங்களில் வைரலாகி கொண்டிருக்கும். அந்த வகையில் தற்போது வேலூர் மாவட்டத்தில் மரத்திலிருந்து நீர் விடாமல் வழிந்து கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது.
இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்க்கும் மக்கள், இது என்ன அதிசயமாக உள்ளது? என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். சிலர் கடவுளின் அருளால் அந்த மரத்திலிருந்து நீர் வழிந்து கொண்டிருப்பதாகவும் கூறி வருகிறார்கள். மரத்திலிருந்து தொடர்ந்து நீர் வெளியேறி வரும் இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.