
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கர்நாடகாவை சேர்ந்தவர் 2016ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி என்னும் கன்னட திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் கன்னடா மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்தார். 2021 ஆம் ஆண்டு ‘சுல்தான்’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
இதைத் தொடர்ந்துதமிழில் வாரிசு, புஷ்பா போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார். தற்போது இவரை நேஷனல் க்ருஷ் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் ,ஹிந்தி போன்ற மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது இந்தியாவில் பல லட்சம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் ஒரு படத்திற்கு கதாநாயகியாக ரஷ்மிகா மந்தனா காமிட் ஆகியுள்ளார். சோசியல் மீடியாவின் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அடிக்கடி கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது தாறுமாறான கிளாமர் லுக்கில் ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த போட்டோஷூட் வீடியோவானது ரசிகர் மத்தில மிக விரைவாக வைரலாகி வருகிறது.
#rashmika #RashmikaMandanna pic.twitter.com/pGMSZQNgLp
— Star Frames (@starframesoffl) September 30, 2023