காஷ்மீர் குளிருக்கு சொட்டர் வாங்காத விஜய்… உடுத்திக்க திரிஷா இருக்காங்களாம்.. அவ்வளவு ரொமான்ஸ்.. வெளியான பாடல் இதோ..!!

விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான வாரிசு படம் உலகெங்கும் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூல் சாதனையும் பெற்று தந்தது. இந்நிலையில் தற்போது தளபதி விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ், மாஸ்டர் படத்திற்கு பிறகு இணைந்து, லியோ படத்தை முடித்துள்ளனர்.

   

ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படத்தை குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்தது. இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான், அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

அண்மையில் இந்த படத்தின் டிரைலர் வெளியான நிலையில், வருகிற 19ஆம் தேதி  திரையரங்குகளில் லியோ படம் வெளியாக உள்ளது. எனவே தற்போது இந்த படத்தின் மூன்றாவது பாடலானா  படக்குழுவினர் வெளியிட்டனர். இதில் விஜய் மற்றும் திரிஷா பல ஆண்டுகள் கழித்து, ரொமான்ஸ் செய்வதை பார்த்த  ரசிகர்கள், இதற்காக தானே இவ்வளவு நாள் காத்திருந்தோம் என கமெண்ட்களை கூறி இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றன.