
விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கென்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதில் பாடும் போட்டியாளர்கள் உடனே ஃபேமஸ் ஆகிவிடுவார்கள். அதில் சிலர் மட்டும் தான் மக்களுடைய பேராதரவையும், அன்பையும் பெற்று மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடிப்பார்கள். அந்த வகையில் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் கபீஷ் பூவையார்.
சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கானா பாடல்களை பாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்த சிறுவன் பூவையார். குழந்தைகயிலேயே தந்தையை இழந்தவர். கானா பாடல்கள் மூலம் வரும் வருமானத்தில் தான் தனது குடும்பத்தை சமாளித்துக் கொண்டு, தனது அம்மாவையும் கவனித்து வருகிறார். இவர் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி முடிந்த உடனே விஜயின் ”பிகில்” படத்தில் பாடல் ஒன்றை பாட வாய்ப்பு கொடுத்தார் ஏ ஆர் ரகுமான்.
விஜயுடன் பாடியதோடு அப்பாடலில் ஆடி குத்தாட்டம் போட்டு இன்னும் புகழ்பெற்றார் பூவையார். இதை தொடர்ந்து ”மாஸ்டர்” படத்திலும் பூவையாருக்கு முக்கியமான கதாபாத்திரத்தில் வாய்ப்பு கொடுத்தார் விஜய். இவ்வாறு பாடல்கள் பாடுவது நடிப்பு என பிஸியாக இருக்கும் பூவையார் தான் ஒரு புதிய கார் ஒன்றை வாங்கி இருப்பதாக இணையத்தில் சமீபத்தில் பதிவு செய்திருந்தார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் பூவையார். இவர் தற்பொழுது தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்ய இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘சின்ன பையனா பாத்த நம்ம பூவையாரா இது?’ ஆச்சரியம் அடைந்துள்ளனர். இதோ அந்த புகைப்படம்…