தெரியுமா செய்தி… திடீரென விற்கப்படும் விஜய் டிவி…. போட்டிபோடும் 3 நிறுவனங்கள்..!!

விஜய் தொலைக்காட்சி

தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருக்கும் விஜய் தொலைக்காட்சி, நவம்பர் 24, 1994 ஆம் ஆண்டு முதல் சென்னையில் கிண்டியைத் தலைமையகமாகக் கொண்டு உலகளவில் இயங்கி வருகின்றது. இந்த அலைவரிசை ஏசியாநெட் சுடார் கம்யூனிகேசன்சு நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும்.

Vijay Television - YouTube

   

பின் ஸ்டார் குழுமம் அந்த தொலைக்காட்சியை வாங்கியவுடன் ஸ்டார் விஜய் ஆனது, அதன்பின் அதை உலக அளவில் புகழ்பெற்ற டிஸ்னி நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. இந்த தொலைக்காட்சியில் நாடகத் தொடர்கள், ஆன்மீக நிகழ்ச்சிகள், சமையல் நிகழ்ச்சிகள், பேச்சு நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், நடன நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் போன்ற பல்சுவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து வருகின்றது. ஆண்டுதோறும் தமிழ் திரைப்படங்களில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தும் நபர்களுக்கு ‘விஜய் விருதுகள்’ என்னும் தலைப்பில் 2006 ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு ஒரு முறை விருதுகள் வழங்கப்படுகின்றன.

Star Vijay TV Schedule | List of Programs and Timings - News Bugz

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி மற்றும் ஹாட்ஸ்டார் இணையதளம் ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்திவரும் டிஸ்னி நிறுவனம், இப்போது அதிரடியாக விஜய் தொலைக்காட்சியை விற்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஹாட்ஸ்டார் தளத்தை மட்டும் வைத்துக் கொண்டு, தொலைக்காட்சியை  விற்பனை செய்வது என முடிவு செய்து, இந்தச் செய்தியை அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்கள். எனவே தற்போது விஜய் தொலைக்காட்சியை வாங்குவதற்காக, ஜியோ நிறுவனம், டாடா நிறுவனம் மற்றும் சோனி நிறுவனம் என்ற 3 நிறுவனங்களும் கடும் போட்டி போட்டு வருகிறார்கள். இந்த 3 நிறுவனங்களில் அதிக தொகையை கொடுத்து யார் வாங்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.