விஜய் டிவி சீரியல் நடிகர்களின் நிஜ மனைவிகள் யார் தெரியுமா?… அழகிய ஜோடியின் புகைப்படங்கள்…

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல்கள் பல விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக விஜய் டிவியில் ஒவ்வொரு சீரியலிலும் சூப்பர் ஜோடிகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள். அதன்படி விஜய் டிவியில் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களின் நிஜ மனைவிகள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகர் மானஸ்:

   

காற்றுக்கென்ன வேலி சீரியலில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த மிரட்டியவர் தான் மானஸ். இவர் பத்து வருடங்களாக காதலித்து நிரஜா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

பானு பிரகாஷ்:

காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்துக் கொண்டிருப்பவர்தான் பானு பிரகாஷ். இவர் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

நடிகர் நந்தா:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் கண்ணே கலைமானே என்ற சீரியலில் ஹீரோவாக நந்தா நடித்து வருகிறார். இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகை சாந்தினியை திருமணம் செய்து கொண்டார்.

நடிகர் அர்னவ்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செல்லம்மா சீரியலில் இவர் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் பிரபல சீரியல் நடிகையான திவ்யா ஸ்ரீதரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் சமீபத்தில் பிரிந்தனர்.

நடிகர் ஆனந்த கிருஷ்ணன்:

செல்லம்மா சீரியலில் செல்லமாவின் முன்னாள் கணவராக நடித்து வருபவர் தான் ஆனந்த கிருஷ்ணன். இவரின் நடிப்பு இதில் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. இவரின் மனைவி.

கார்த்திக் சசிதரன்:

விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தான் பொன்னி. இந்த சீரடியில் ஹீரோவாக நடித்து வருபவர் தான் கார்த்திக் சசிதரன். இவர் பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

நடிகர் வினோத் பாபு:

தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் நடிகர் வினோத் பாபு ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் சிந்து என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

நடிகர் தேவ் ஆனந்த்:

தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார். இவர் தனது பெற்றோர்கள் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் குழந்தை இல்லாததால் தம்பி மகனை தற்போது வளர்த்து வருகிறார்.

 

நடிகர் தீபக்:

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஹீரோவாக நடித்து வருபவர் தான் தீபக். இவர் சிவரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

நடிகர் நவீன் வெற்றி:

தமிழும் சரஸ்வதி சீரியலில் ஹீரோவின் தம்பியாக நடித்து வருபவர் தான் நவீன் வெற்றி. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான சௌமியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

நடிகர் சஞ்சீவ்:

ராஜா ராணி சீசன் 1 சீரியலில் ஹீரோவாக நடித்தவர் தான் சஞ்சீவ். இவர் அதே சீரியலில் தன்னுடன் நடித்த ஆலியா மானசாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.