எவ்ளோ பெரிய வீடு… நடிகை அறந்தாங்கி நிஷாவின் பிரம்மாண்ட வீட்டை பாத்திருக்கீங்களா?… அவரே வெளியிட்ட ஹோம் டூர் வீடியோ இதோ…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்க போவது யாரு’ நிகழ்ச்சியில் ஸ்டான்ட் அப் காமெடி செய்து பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. தன்னை யார் கிண்டல் செய்தாலும் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் தனது திறமையால் மட்டும் முன்னேறிய அறந்தாங்கி நிஷா தற்போது  தொகுப்பாளினியாகவும், வெள்ளித்திரையில் ஏராளமான படங்களில் காமெடி நடிகையாகவும் நடித்து வருகிறார்.

   

தற்பொழுது மாரி 2, கோலமாவு கோகிலா, திருச்சிற்றம்பலம் என தொடர்ந்து பல படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் நிஷா. பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். நிஷாவின் கணவர் பெயர் ரியாஸ். அழகிய ஜோடியான இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.

தற்பொழுது இவர் பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து கொண்டு வருகிறார்.இந்நிலையில் நிஷா தற்பொழுது ‘கருப்பு ரோஜா’ என்ற யூ டூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

இதில் அவர் தான் சொந்தமாக கட்டி வரும் புதிய வீட்டினை ஹோம் டூர் செய்து விடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த விடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். தற்பொழுது இந்த வீடியோ படுவைரலாகி வருகிறது.

வைரலாகும் அந்த வீடியோ இதோ….