
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை நயன்தாரா. இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று செல்ல பெயரால் அழைத்தனர்.இயக்குனர் சத்யன் அந்திக்கடால் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளியான ‘மனசினக்கரே’ திரைப்படத்தின் மூலமாக மலையாளத் திரையுலகில் அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து தமிழில் 2005 ஆம் ஆண்டு வெளியான ‘ஐயா’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து சிவாஜி, வல்லவன், ஆரம்பம், கோலமாவு கோகிலா, அறம், விசுவாசம் , தர்பார், அண்ணாத்த போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.தற்போது நடிகை நயன்தாரா லேடிஸ் சூப்பர் ஸ்டார் 75 மற்றும் NT -81 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இரண்டு படங்களிலும் நடிக்க உள்ளார்.
நடிகை நயன்தார விகடன் விருது விழாவில் கலந்து கொண்டார் . அதில் தொகுப்பாளர் ஒருவர் நீங்கள் சி.எம் ஆக போறீங்களா!!!! என்று கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram