அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்ற கேள்விக்கு பளீச் என்று பதில் கூறிய  ‘லியோ’ பட நடிகர்….

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘லியோ’ திரைப்படத்தின் சூட்டிங் தற்போது முடிவடைந்துள்ளது.தற்போது படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.  இப்படத்தில் அர்ஜுன்,  மன்சூர்  அலிகான்,  கௌதம் மேனன்,  மிஷ்கின் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் “நான் ரெடி தான் வரவா’ என்ற பாடல் வெளிவந்து மக்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்தது .இது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் யார்? என்ற பேச்சு தான் இப்போது தமிழ் திரையுலகில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

   

சமூக வலைதளங்களில் இதற்காக ரஜினி ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் பதிவுகளை பதிவிட்டு சண்டையிட்டு வருகின்றனர்  இது குறித்து சினிமா பிரபலங்கள் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் ‘லியோ’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் மன்சூர் அலிகான் அண்மையில் யு டியூப் சேனல் ஒன்றில் பேட்டி அளித்திருந்தார் அவரிடம் சூப்பர் ஸ்டார் பஞ்சாய் குறித்து கேள்வி கேட்டபோது அதற்கு பதில் மன்சூர் அலிகான்ஹிந்தியில் சூப்பர் ஸ்டாராக திலீப்குமார் இருந்தார்.

பிறகு ராஜேஷ் கண்ணா வந்தார். தமிழில் தியாகராஜ பாகவதர் இருந்தார். பின் எம்ஜிஆர் வந்தார். அதற்கு பிறகு ரஜினிகாந்த் வந்தார்.ஒருவரின் மூன்று படங்கள் வரிசையாக ஓடி வசூலித்துவிட்டால் அவர்தான் உச்ச நட்சத்திரம் என்று கருதப்படுகிறது. வயதானால் பட்டத்தை விட்டுக்கொடுத்துவிட வேண்டும். ரஜினிகாந்த் ஒரிஜினலாகவும் சூப்பர் ஸ்டாராக இருக்க வேண்டும். படத்தில் மட்டும் இருந்தால் எப்படி. நிஜத்திலும் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் என்றால் அது எம்.ஜி.ஆர் மட்டும்தான்’ என்று பேசியுள்ளார். தற்போது இந்த செய்தி வைரலாகி வருகிறது.