படக்குழுவுக்கு தெரியாமல் லீக்கான வேட்டையன் பட வீடியோ.. அதிர்ச்சிக்குள்ளான படக்குழு..!!

லைகா நிறுவனம் தயாரிப்பில், நடிகர் ரஜினிகாந்தின் 170வது படமான வேட்டையன் திரைப்படத்தை, இயக்குநர் ஞானவேல் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

   

இந்நிலையில், இத்திரைப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்புகள் தூத்துக்குடி மற்றும் சென்னை பகுதிகளில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்புகள் ஆந்திர மாநிலம் கடப்பாவில் நடந்தது. இதைத் தொடர்ந்து, தற்போது வேட்டையன் திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.

ரஜினிகாந்த் மீண்டும் வேட்டையின் படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். படத்தின் அறிமுக டீசரில் சாதாரண சட்டை அணிந்து கொண்டு வித்தியாசமான கூலிங் கிளாசை செம ஸ்டைலாக அணியும் வீடியோ வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. தற்போது படப்பிடிப்பு தளத்திற்கு காக்கி சட்டை அணிந்து கொண்டு ரஜினிகாந்த் கெத்தாக செல்லும் வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகின்றன.