மகளிர் தின ஸ்பெஷல்…. கோலிவுட் சினிமாவை கலக்கும் சிறந்த தமிழ் பெண் இயக்குனர்கள்…. யார் யார் தெரியுமா….??

தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரையில் தமிழ் திரை உலகம் சிறந்த திரைப்படங்களை மக்களுக்கு வெளிப்படுத்துவதில் பெயர் போனது. இந்தத் துறையில் பெண் தொழில்நுட்ப வல்லுநர்களை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஏனென்றால் அவர்களின் பங்கு நடிப்பு மட்டும்தான். ஆனால் சமீப காலமாக விஷயங்கள் மாறி பெண் இயக்குனர்கள் படிப்படியாக வளர்ந்து கொண்டிருக்கின்றன.

   

சில பெண்கள் தற்போது திரைப்படத்துறையில் முத்திரை பதித்து வருகிறார்கள். கோலிவுட்டில் பெண் இயக்குனர்கள் பலரும் தங்களின் சிறந்த படைப்பால் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளனர். அப்படி சினிமாவை கலக்கிக் கொண்டிருக்கும் பெண் இயக்குனர்கள் பற்றி மகளிர் தினத்தில் பார்ப்போம்.

கிருத்திகா உதயநிதி:

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் மனைவி தான் கிருத்திகா. இவர் வணக்கம் சென்னை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி விஜய் ஆண்டனி நடித்த காளி திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

இவர் அடுத்தடுத்து பல திரைப்படங்களை இயக்கி வருகிறார்.

சுதா கொங்கரா:

தமிழில் இவரின் முதல் திரைப்படம் இறுதிச்சுற்று. இது பாக்ஸிங் திரைப்படமாகும். மாதவன் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.அதனைத் தொடர்ந்து சூரரைப் போற்று திரைப்படத்தையும் இவர் இயக்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

காயத்ரி மணிகண்டன்:

இவர் தமிழில் விக்ரம் வேதா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த திரைப்படம் அவரின் புகழையும் அங்கீகாரத்தையும் மிகப்பெரிய அளவிற்கு கொண்டு சென்றது. இந்த திரைப்படம் பல விருதுகளையும் வாங்கி குவித்தது. இவர் தனது கணவர் புஷ்கருடன் இணைந்து திரைப்படங்களை எழுதி இயக்கி வருகிறார்.

லஷ்மி ராமகிருஷ்ணன்:

ஆரோகணம் திரைப்படம் இயக்குனர் லட்சுமியின் முதல் திரைப்படம் ஆகும். இது விஜய் விருதுகளில் பல விமர்சனங்களையும் விருதுகளையும் பெற்றது. இவரின் இரண்டாவது திரைப்படம் நெருங்கி வா முத்தமிடாதே. இவர் அடுத்தடுத்து பல படங்களை இயக்கி வருகிறார்.

வி பிரியா:

பிரசன்னா மற்றும் லைலா நடித்த கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் இவர் இயக்குனராக அறிமுகமானார். இந்த திரைப்படம் நல்ல பாராட்டுகளை பெற்றது. மணிரத்தினம் தான் இவருக்கு வழிகாட்டியாக இருந்தார். இவரின் இரண்டாவது திரைப்படம் கண்ணாமூச்சி ஏனடா.

மதுமிதா:

ஆரம்பத்தில் குறும்படங்களை இயக்கி வந்த இவர் பார்த்திபன் மற்றும் சாயா சிங் நடித்த வல்லமை தாராயோ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.கடந்த 2008 ஆம் ஆண்டு சிறந்த குடும்ப படத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை இந்த திரைப்படம் வென்றது. இது பல்வேறு சர்வதேச திரைப்படங்களிலும் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சௌந்தர்யா:

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகளான சௌந்தர்யா தனது தந்தையும் பாலிவுட் நடிகையுமான தீபிகா பSudha Kongara Prasad at Irudhi Suttru Thanks Giving Meet வைத்து கோச்சடையான் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் தனுஷ் மற்றும் அமலாபால் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தையும் இவர் இயக்கினார்.

ஐஸ்வர்யா:

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் 3 என்ற திரைப்படத்தை இயக்கி அதன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி வைத்தார். அந்த திரைப்படத்தில் வைதீஸ் கொலவெறி டி என்ற பாடல் இடம்பெற்றது. அடுத்ததாக கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா ஆனந்த் நடிப்பில் வெளியான வை ராஜா வை என்ற படத்தையும் இயக்கியது இவர்தான். இவர் அடுத்ததாக தனது தந்தையை வைத்து லால் சலாம் திரைப்படத்தை இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.