‘என்ன ரொம்ப கொடுமை படுத்துறாங்க.. என்னால சுத்தமா முடியல’…. பரபரப்பை ஏற்படுத்திய விஜே ஜாக்லின்… வைரலாகும் வீடியோ இதோ…

விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்த விஜே ஜாக்குலின் வெளியிட்டுள்ள சமீபத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் ஏராளமான தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றியவர் தொகுபாளினி ஜாக்குலின். இவர் விஜய் டிவியில் ‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ரக்சன் உடன் இணைந்து பணியாற்றி ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். இவருக்கென்று சமூக வலைத்தளங்களில்  ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

   

தொகுப்பாளினியாக பணியாற்றிய இவருக்கு விஜய் டிவி சீரியலில் நடிகையாக நடிக்கும் வாய்ப்பை வழங்கியது. இதை தொடர்ந்து இவர் தேன்மொழி பி ஏ சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலம் அடைந்தார். மேலும் கோலமாவு கோகிலா, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தற்பொழுது சீரியலிலும் சரி, தொகுப்பாளராகவும் சரி பெரிதும் திரையுலகில் தலை காட்டவில்லை விஜே ஜாக்லின். இதற்கு காரணம் அவர் உடல் எடையை குறைக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம். தற்பொழுது அவர் தன்னுடைய இணையதள பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோவில் அவர் ‘என்ன ரொம்ப கொடுமை படுத்துறாங்க. என்னால சுத்தமா முடியல. வாந்தி மயக்கம் வந்தாலும் தன்னை உடற்பயிற்சி செய்ய சொல்லி கொடுமைப்படுத்துவதாக கூறி ஜாலியான வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ….