‘உடல் எடையை குறைக்கிறேன்னு இப்படி ஆயிட்டீங்களே’… படு ஸ்லிம் லுக்கில்  புகைப்படங்களை வெளியிட்ட நடிகை லாஸ்ட்லியா…. வருத்தத்தில் புலம்பும் ரசிகர்கள்….

பிக் பாஸ் பிரபலமான நடிகை லாஸ்லியா தனது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை தற்போது இணையத்தில் பதிவு செய்துள்ளார்.

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் லாஸ்ட்லியா. இதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார் லாஸ்லியா. இந்த நிகழ்ச்சியில்  சக போட்டியாளர் கவினுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார்.

   

பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதும் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் , லாஸ்லியா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு கவினை கண்டுகொள்ளவே இல்லை. இந்த நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலம் இவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.

இதை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரத்தை ஏற்றி நடித்தார். ஆனால் இத்திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியை இவருக்கு தேடி தரவில்லை. ஆனாலும் இவர் தற்பொழுதும் பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை லாஸ்ட்லியா.

இவர் அவ்வப்பொழுது தனது கிளாமர் புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் அப்லோட் செய்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது பாவாடை சட்டை அணிந்து தனது ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக ரசிகர் ஒருவர் ‘உடம்ப பாத்துக்கோங்க… நல்லா தான் இருந்தீங்க.. உடம்பை குறைக்கிறேன்னு இப்படி ஆயிட்டீங்களே’.. என்று வருத்தத்தோடு கமெண்ட் செய்துள்ளா.ர் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்…

வைரலாகும் ரசிகரின் கமெண்ட் இதோ…