நடிகை ஸ்ரீ பிரியாவின் குடும்பத்தை பார்த்து உள்ளீர்களா?.. என்ன ஒரு அழகான குடும்ப புகைப்படம்…

90s  களில்   ரசீகர்களின் கனவு கன்னியாக  திகழ்ந்தவர் தான்   நடிகை ஸ்ரீ பிரியா. இவர் 1956 ஆம் ஆண்டு மார்ச் 5 தேதி பிறந்துள்ளார்.

   

இவர் சென்னையை சேர்ந்தவர். இவர் தந்தை பக்கிரிசாமி ஒரு நடன கலைஞராவார். அம்மா கிரிஜாவும் நடன கலைஞர்.

இவர் தந்தை ஜெமினி தயாரித்த ‘மூன்று பிள்ளைகள்’ என்ற படத்தில் நடன இயக்குனராக  பணியாற்றி உள்ளார்.

ஸ்ரீப்ரியா பி மாதவன் இயக்கத்தில் வெளியான ‘முருகன் காட்டிய வழி’ என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகினார்.

அலமேலு என்ற தன் பெயரை திரையுலகிற்காக  ஸ்ரீபிரியா என்று மாற்றிக்கொண்டார். 1974 ஆம் ஆண்டு கே பாலச்சந்திரன் இயக்கத்தில் வெளியான ‘தொடர்கதை’ என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் இவர் இளம் வயது விதவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஸ்ரீபிரியா தமிழில் பிரபல  நடிகர்களுடன் ஜோடியாக பல படகளில்  நடித்திருக்கிறார்.

இவர் அதிகமாக ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் ஆகிய இருவருடனும் அதிக படங்கள் நடித்துள்ளார்.

இவர் தமிழில் எம் ஜி ஆர், சிவாஜி கணேசன், ஜெய்சங்கர் என பல பிரபல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார்.

இவர் தமிழில் மட்டும் 150 படங்கள் நடித்துள்ளார். இதில் சிவாஜியுடன் 20 படங்களும், ஜெய்சங்கர் உடன் 20, படங்களும் கமலுடன் 32 படங்களும், ரஜினியுடன் 30 படங்களும், நடித்து  முன்னணி தொடர் நாயகியாக உலா வந்தவர்.

ஸ்ரீப்ரியா தமிழ் ,தெலுங்கு ,மலையாளம், கன்னடம், என 350 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.  இவர் தமிழில் தொடர்கதை, அவள் அப்படித்தான், ஆட்டுக்கார அலமேலு, தாய் மீது சத்தியம், நட்சத்திரம், நீயா, பைரவி, வாழ்வே மாயம்  என படங்களில் நடித்துள்ளார்.

நடிகை ஸ்ரீபிரியா நடிகர் ராஜ்குமாரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சினேகா நாகர்ஜூன் என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

தற்போது  சீரியலில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நீயா மற்றும் நட்சத்திரம் என்ற இரண்டு படங்களையும் தயாரித்துள்ளார்.

தற்போது இவரின் குடும்ப புகைப்படம்  இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.