‘கில்லி’ படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த நடிகை ஜானகி சபேஷ் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவர் நடிகர் விஜய் .இவர் சினிமா பயணத்தில் முக்கியமான படங்களில் ஒன்று கில்லி இப்படத்தில் விஜயின் அம்மா வாக நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை  ஜானகி சபேஷ்.

   

இவர்  பெங்களூரில் பிறந்தவர். தனது ஆரம்ப பள்ளிப்படிப்பை கொல்கத்தாவில் உள்ள கார்மல் பள்ளியில் படித்தார்.

அதன் பிறகு புது தில்லியில் உள்ள DTEA  மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார். டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீ ராம் பெண்களுக்கான கல்லூரியில் Political Science இளங்கலைப் பட்டம் பெற்றார்.

டெல்லி ஜாமியா மில்லியாவில் வெகுஜனத் தொடர்பியல் முதுகலைப் பட்டமும் பெற்றார்.இவர் 1997 ஆம் ஆண்டு வெளியான ‘மின்சார கனவு’ என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து 1998 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான ‘ஜீன்ஸ்’ படத்தில் ஐஸ்வர்யாவின் அம்மாவாக நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

இவர் தமிழில் குஷி , உனக்கு 20 எனக்கு 18, வேட்டையாடு விளையாடு, வில்லன், வல்லவன், அயன், சிங்கம், சிங்கம் 2, பூஜை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர்  Cadburys, Pepsodent, KFJ, NAC ஜூவல்லர்ஸ், சக்ரா கோல்ட் டீ, ஜான்சன்ஸ் தோதி போன்ற விளம்பரங்களில்  நடித்துள்ளார்.

இவர் நடிகை , இந்தியா ஊடக வல்லுனர், மாடல்,  ஆசிரியர் என பன்முக திறமைகளை கொண்டவர்.

இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை ஜானகி சுபேஷ் சுப்பிரமணியம்  என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு ஒரு மகள் உள்ளார்.இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.