எதிர்நீச்சல் சீரியல் கனிகாவா இது?… யாரும் பார்த்திராத திருமண புகைப்படங்கள்… இதோ உங்களுக்காக..!!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தவர் கனிகா. 1982 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த இவர் 1999 ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு தேர்வில் சிறந்து விளங்கியதற்காக தமிழக அரசு விருது பெற்றார்.

   

தமிழக அரசு சார்பில் மெரிட் மூலமாக ராஜஸ்தானுக்கு சென்று பொரியல் படிப்பு படித்தார். அவர் படித்ததும் மெக்கானிக் இன்ஜினியர் என்றாலும் நன்றாக பாடும் திறமையை கொண்டிருந்தார்.

2001 ஆம் ஆண்டு மிஸ் சென்னை பழகிப் போட்டிக்காக இவரை பாட அழைத்தார்கள். ஆனால் அதில் ஒரு சுவாரசியமான விஷயம் நடந்தது.

கடைசி நேரத்தில் ஒரு மாடல் வரவில்லை என்பதற்காக வேறு வழி இன்றி இவர் அந்த போட்டியில் கலந்து கொண்டார். அப்போட்டியில் பட்டமும் வென்றார்.

இதன் காரணமாக இவரை நோக்கி பட வாய்ப்புகள் வரத் துவங்கியது. கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் தயாரித்த பைவ் ஸ்டார் திரைப்படத்தில் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

பின்னர் சங்கர் போன்ற மிகப்பெரிய இயக்குனர்களுடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் படிப்பை முடித்துவிட்டு தான் நடிப்பேன் என்று வந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டார் கனிகா.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்,

தமிழில் ஆட்டோகிராப், வரலாறு, எதிரி உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கின்றார். கடந்த 2008 ஆம் ஆண்டு ஷியாம் ராதாகிருஷ்ணன் என்கின்ற அமெரிக்க சாஃப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு சாய் ரிஷி என்ற மகன் பிறந்துள்ளான். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை விட்டுவிட்ட கனிகா தற்போது எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார்.