கில்லி படத்துடன் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலை ஒப்பிட்டு கடுமையாக விமர்சித்த இயக்குனர் ஹரி..!!

பிரபல இயக்குனரான ஹரி இயக்கத்தில் உருவான யானை படத்தில் அருண், விஜய் பிரியா பவானிசாகர் ஆகியோர் நடித்தனர். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஹரி இயக்கிய ரத்னம் திரைப்படம் வருகிற 26-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

   

அப்போது சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான கில்லி ரீ-ரிலீஸ் படத்தை பார்க்க தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் 60 சதவீதத்தை கூட வாக்குகள் தொடவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது.

கில்லி' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..? – News18 தமிழ்

அதற்கு பதில் அளித்த ஹரி 100% வாக்குப்பதிவுக்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால் வேலை என இன்னும் சில பிரச்சனைகள் இருக்கலாம். வாக்களிப்பது ஜனநாயக கடமை. எனது உரிமை. என் பிரதமரை நான் தான் தேர்வு செய்வேன் என்ற எண்ணம் நமக்குள் வர வேண்டும். இந்த முறை வாக்களிக்க வந்த முதியவர்களுக்கு நாற்காலி எல்லாம் கொடுக்கப்பட்டது.

Director Hari hospitalized due to high fever! Tamil Movie, Music Reviews and News

அடுத்த முறையாவது வாக்கு சதவீதம் அதிகரிக்க வேண்டும் என கூறினார். இதனையடுத்து விஜய் அரசியல் வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதற்கு யாரும் தடை போட முடியாது. மக்களுக்கு யார் வேண்டுமானாலும் சேவை செய்யலாம் என ஹரி கூறியுள்ளார்.

Actor Vijay Launches Political Party, Says Won't Contest 2024 Lok Sabha Polls - News18