‘அது வேற வாய்… இது நாற வாய்’… வடிவேலுவின் அம்மாவாக நடித்த நடிகை என்ன ஆனார்  தெரியுமா?… இதோ பாருங்க…

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சண்முகசுந்தரி. இவர் பாய்ஸ் நாடார் கம்பெனியில் சேர்ந்து மேடை நாடகங்களில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார். 16 வயதிலிருந்து சினிமாவில் நடிக்க தொடங்கியவர். காமெடி, குணச்சித்திரம், வில்லி  என 750 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் .

   

எம்.ஜி.ஆருடன் ‘நீரும் நெருப்பும்’, ‘என் அண்ணன்’, ‘கண்ணன் என் காதலன்’, ‘இதயக்கனி’, சிவாஜியுடன் ‘லட்சுமி கல்யாணம்’, ஜெமினியுடன் ‘மாலதி’ மற்றும் இன்றைய இளம் ஹீரோக்களின் படங்களிலும் நடித்திருக்கிறார். சில படங்களில் பின்னணியும் பாடியிருக்கிறார். ‘மிடில் கிளாஸ்’ மாதவன் திரைப்படத்தில் வடிவேலுவின் அம்மாவாக சண்முகசுந்தரி நடித்த காமெடி காட்சி அவரது திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.

காலையில் தன் தாய் சண்முகசுந்தரி, தந்தை காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்று  சென்று ஆட்டோ ஓட்டி  வந்து அம்மாவை அடித்து உதைப்பார் வடிவேலு. அப்போது சண்முகசுந்தரி ‘காலையில் நீ என்னை மகாலட்சுமி’ என்று கூறினாயே என்று கேட்க, வடிவேலு அது நல்ல வாய், இது நாற வாய்  என்று கூறுவார்.

இந்த காமெடி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. நடிகை சண்முகசுந்தரிக்கும் ஐந்து மகள்கள் உள்ளனர். இவர்களில் டி.கே.கலா, ‘அகத்தியர்’ படத்தில் ‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை’, ‘பல்லாண்டு வாழ்க’ படத்தில் ‘போய் வா நதியலையே’ உட்பட ஏராளமான பாடல்கள் பாடியிருக்கிறார். சினிமாவிலும் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்.

பல வருடங்களாக சர்க்கரை நோயால் அவதிப்பட்ட நடிகை சண்முகசுந்தரி தனது 75 வயதில் 2012 இல் மரணம் அடைந்தார். இவர் இறந்தாலும் இப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார் நடிகை சண்முகசுந்தரி.