அப்துல் கலாமோடு இருந்த நபரை.. பார்க்க வந்த அமெரிக்க ஜனாதிபதி.. யார் அவர்.? அப்படி என்ன செய்தார்..?

ஒருமுறை அமெரிக்க ஜனாதிபதி, நம் நாட்டின் மறைந்த முன்னாள் ஜனாதிபதியான ஏபிஜே அப்துல் கலாம் அவர்களையும், பாலம் கல்யாணசுந்தரம் அவர்களையும் பார்ப்பதற்காக வந்திருக்கிறார். ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் இந்த பாலம் கல்யாணசுந்தரம் யார்? என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

   

1940 ஆம் வருடத்தில் பிறந்த பாலம் கல்யாணசுந்தரம், படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி இருக்கிறார். அப்போது, அவருக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த பத்தாயிரம் ரூபாய் மொத்தத்தையும் ஏழை எளிய குழந்தைகளுக்கும் மக்களுக்கும் தானமாக வழங்கி விட்டாராம்.

ஒருமுறை இரு முறை அல்ல, தான் 30 வருடங்களாக சம்பாதித்த 30 லட்ச ரூபாயையும் மொத்தமாக வழங்கியிருக்கிறார். அதுபோக, மாலை நேரத்தில் ஓட்டல் ஒன்றில் சர்வராக வேலை பார்த்து தான் தன் வீட்டு செலவிற்கு பணம் கொடுத்திருக்கிறார்.

இப்படிப்பட்ட மாமனிதரை வழக்கம் போல் நாம் மிகப்பெரிய அளவில் கௌரவிக்க தவறி விட்டோம். ஆனால் அமெரிக்கா இவரை பார்த்து வியந்தது. கடந்த 1000 வருடங்களில் இவர் தான் சிறந்த மனிதர் என்று கூறி, The Man of the Millennium என்ற மிக உயரிய விருதை வழங்கி சிறப்பித்ததோடு, அவருக்கு 30 கோடி ரூபாய் ரொக்க பரிசு வழங்கி இருக்கிறது.

அதனை மரியாதையோடு வாங்கிக் கொண்ட பாலம் கல்யாணசுந்தரம், அதிலும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்திருக்கிறார். எவ்வளவு ரூபாய் என்றால், அந்த முப்பது கோடி ரூபாயையும் தானமாக வழங்கிவிட்டார்.