கண்ணம்மாவை பெண் பார்க்க செல்லும் பாரதி… என்னமா ரொமான்ஸ் பண்றாரு… ரசிகர்களை குஷிபடுத்திய ப்ரோமோ இதோ…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று  ‘பாரதி கண்ணம்மா’. இந்த சீரியல் தற்போது பல வருடங்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சீரியல் ஆரம்பித்த நாளில் மக்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

   

ஆனால் நாட்கள் செல்ல செல்ல இழுவாய் இழுத்ததால் மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்தது. தொடர்ந்து ரசிகர்கள் ‘எப்பொழுதுதான் இந்த சீரியலை முடிக்க போகிறீர்கள்?’ என்று கேள்வி கேட்க தொடங்கினர். ஒரு வழியாக ரசிகர்களின் ஆசை தற்பொழுது நிறைவேற உள்ளது.

தற்பொழுது இந்த சீரியலில் பாரதி தனது சுயநினைவு அனைத்தையும் இழக்க, கண்ணம்மா பழைய கண்ணம்மாவாக மாறி அவரின் நினைவுகளை மீட்டெடுத்துள்ளார். இந்நிலையில் கண்ணம்மாவும் பாரதியும் ஒன்று சேர்ந்து விட்டனர். தற்போது பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதிக்கும் கண்ணம்மாவிற்கும் திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமணத்தில் நடக்கும் சடங்குகள் குறித்த ப்ரோமோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதில் தனது தனது மனைவி கண்ணம்மாவை  மறுபடியும் பெண் பார்க்க வந்த பாரதி ரொமான்ஸ்ஸில் பின்னி பெடல் எடுத்துள்ளார். மேலும் இந்த ப்ரோமோவில் பெண்ணை பாட கூறுகின்றனர். கண்ணம்மா வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் வரும் மல்லி பூ பாடலை பாடி அசத்துகிறார். இந்த வீடியோவில் பாரதியின் முகம் வெட்கத்தால் சிவந்துள்ளது. தற்பொழுது இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

வைரலாகும் அந்த ப்ரோமோ வீடியோ இதோ….