‘போக்கிரி’ பட நடிகை பிருந்தா பரேக் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?.. என்ன ஒரு அழகான குடும்ப புகைப்படங்கள்

2007 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் ‘போக்கிரி’. இப்படத்தில் மோனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டார் நடிகை பிருந்தா பரேக்.

   

1982 ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி பிறந்தார். இவர் மும்பையை சேர்ந்தவர். 2002 ஆம் ஆண்டு ‘சோந்தம்’என்ற படம் மூலமாக தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு வெளியான ‘மன்மதன்’ படத்தில் ரேணுகா மேனன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில்  அறிமுகமானார்.

இவர் தமிழில் திருடிய இதயத்தை, சுதேசி ,பொல்லாதவன் ,சில்லுனு ஒரு சந்திப்பு, குரு என் ஆளு போன்ற பல படங்களில்  நடித்துள்ளார்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ,மராத்தி போன்ற மொழி படங்களில் இவர் நடித்துள்ளார்.

இவர் நடிகை மட்டுமல்ல ஒரு மாடலும் கூட .இவர்  விமல் சூட்டிங்ஸ், மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்பி, ஆங்கர் சுவிட்சுகள், விஐபி பிரஞ்சு, கிட் கேட்,

தம்ப்ஸ் அப், போலோ மிண்ட், ராயல் சேலஞ்ச் பீர், அமுல் மச்சோ வெஸ்ட்ஸ் போன்றவற்றிற்கான  தொலைக்காட்சி விளம்பரங்களில்  நடித்துள்ளார்.

பிறகு அச்சு ஊடகங்களில் நூற்றுக்கணக்கான பொருட்களின் விளம்பரங்களில் இவர்  நடித்துள்ளார்.

இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாது சின்னத்திரையிலும் நடித்துள்ளார் .தற்போது இவர் பிறமொழி படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை பிருந்தா பரேக் அஜய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் உள்ளார். தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி  வருகிறது.