இந்த போட்டோவில் க்யூட்டாக இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா?… இன்று இவர் பிரபல முன்னணி நடிகர்… கண்டுபிடிங்க பார்க்கலாம்…

நடிகர் ஜீவாவின் சிறு வயது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஜீவா. இவர் 2003ல் வெளியான ‘ஆசை ஆசையாய்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவர் பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகராக வலம் வந்தார்.

   

நடிகர் ஜீவா ஆரம்பத்தில் ராம், சிவா மனசுல சக்தி, தெனாவட்டு நீதானே என் பொன்வசந்தம் போன்ற பல திரைப்படங்களில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இதை தொடர்ந்து முன்னணி நடிகராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென சினிமாவில் சரிவை சந்திக்க ஆரம்பித்தார்.

இதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது இவர் சரியான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்காததே. தற்பொழுது சினிமாவில் முன்னணி இடத்தை பிடிக்க முயற்சி செய்து வருகிறார் நடிகர் ஜீவா. நடிகர் ஜீவாவின் குடும்ப வாழ்க்கையை பற்றி பார்க்கும் பொழுது இவர் 2007ல் சுப்ரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்பொழுது ஒரு குழந்தையும் உள்ளது.

நேற்று நடிகர் ஜீவா தனது பிறந்த நாளை கொண்டாடினார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் ஜீவாவின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்…