முன்னணி நடிகைகளையே மிஞ்சும் நடிகை தமன்னாவின் சொத்து மதிப்பு… இத்தனை கோடிகளா?… கேட்டா ஷாக் ஆயிடுவீங்க…

நடிகை தமன்னாவின் மொத்த சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் ‘கேடி” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதை தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் இணைத்து நடித்து தற்பொழுது முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டுள்ளார்.

   

இவர் தமிழில் இறுதியாக விஷால் நடிப்பில் வெளிவந்த ‘ஆக்சன்’ திரைப்படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து அவர் எந்த ஒரு தமிழ் திரைப்படத்திலும் நடிக்கவில்லை. தனது கவனத்தை முழுமையாக இந்தி திரைப்படங்களில் மட்டும் செலுத்தி வருகிறார். படங்கள், வெப் சீரியஸ் என ஹிந்தியில் பலவற்றில் ஒப்பந்தமாகி தற்பொழுது பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

இவர் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை தமன்னாவின் முழு சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அதன்படி நடிகை தமன்னாவின் இன்றைய முழு சொத்து மதிப்பு மட்டும் சுமார் 110 கோடி என்று கூறப்படுகிறது. இந்த சொத்து மதிப்பு முன்னணி நடிகையான சமந்தாவின் சொத்து மதிப்பை விட அதிகம் என்றும் சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது. இதை அறிந்த ரசிகர்கள் ‘நடிகை தமன்னா முன்னணி நடிகைகளே சொத்து மதிப்பில் மிஞ்சிட்டாங்களே’ என்று கூறி வருகின்றனர்.