‘நவரச திலகம்’ நடிகர் முத்துராமனின் மகனை பார்த்திருக்கீங்களா?… அவரும் ஒரு முன்னணி நடிகரா?… நீங்களே பாருங்க…

பழம்பெரும் நடிகர் முத்துராமன் அவர்களின் மகன் பற்றிய தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

1960 முதல் 70 காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் மறைந்த பழம்பெரும் நடிகர் முத்துராமன். நாடகங்களின் மூலம் தனது திரை பயணத்தை ஆரம்பித்த இவர் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரை ரசிகர்கள் ‘நவரச திலகம்’ என்று கொண்டாடுகின்றனர்.

   

சிவாஜி கணேசன், எம்ஜிஆர், நாகேஷ், நம்பியார் என இவர்களைத் தொடர்ந்து நடிகர் முத்துராமனும் இன்றளவும் ரசிகர்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். நடிகர் முத்துராமனின் குடும்பத்தை பற்றி பார்க்கும் பொழுது இவர் சுலோச்சனா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

முத்துராமன் – சுலோச்சனா தம்பதியினருக்கு மொத்தம் நான்கு பிள்ளைகள். அதில் ஒருவர் தான் இன்று தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர். அவர் வேறு யாரும் இல்லை நடிகர் கார்த்திக் தான். இவரும் தனது தந்தையைப் போல திரையுலகில் கால் பதித்து புகழின் உச்சத்தை அடைந்துள்ளார் என்றே கூறலாம்.

இவரை தொடர்ந்து இவரது மகன் கௌதம் கார்த்திக் சினிமாவில் பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். சமீபத்தில் இவர் நடிகை மஞ்சிமா மோகனை  காதலித்து திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. தற்பொழுது இந்த  தகவல் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.