’10 ரூபாய் டிக்கெட்டில் தான் ‘கில்லி’ படத்தை பார்த்தேன்… பாப்கார்ன் வாங்க கூட காசு இல்லை’… கடந்த காலம் பற்றி உருக்கமாக கூறிய பிரபல காமெடி நடிகர்…

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சதீஷ். இவர் தனது திரைப்பயணத்தை இயக்குனர் கிரேசி மோகனிடம் உதவியாளராக தொடங்கினார். இதைத்தொடர்ந்து ஏ எல் விஜய் இயக்கிய ‘பொய் சொல்ல போறோம்’ என்ற திரைப்படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றினார். இதை தொடர்ந்து மதராசபட்டினம், எதிர்நீச்சல், மான்கராத்தே போன்ற  திரைப்படங்களில் காமெடியனாக நடித்தார்.

   

தற்பொழுது படிப்படியாக தனது திறமையினாலும் ,கடின உழைப்பாலும் வளர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் ‘கணம்’ திரைப்படம் வெளியாகி  மக்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து இவர் சன்னி லியோனியுடன் இணைந்து ஓ மை கோஸ்ட்  திரைப்படத்திலும் நடித்துள்ளார். தனது திரை பயணத்தில் ஏகப்பட்ட கஷ்டங்களை அனுபவித்த நடிகர் சதீஷ் தனது கடந்த காலம் பற்றி பிரபல நியூஸ் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

இந்த பேட்டியில் அவர் ’10 ரூபாய் டிக்கெட்டில் கில்லி படத்தை பார்த்தேன் என்றும், பாப்கார்ன் வாங்க கூட காசு இல்லை’ என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது இவரின் இந்த பேட்டி வைரலாகி வருகிறது.