படங்களைப் போல்.. ரீரிலிஸ் ஆகும் சன் டிவி சீரியல்… மகிழ்ச்சியில் ரசிகர்கள்..

இந்த வருடம் 2024 ரீ ரிலீஸ் ஆண்டு என்று சொல்லலாம் இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து பல திரைப்படங்கள் ரீ ரிலீஸ் ஆகி வருகின்றனர்.சமீபத்தில் விஜய்,த்ரிஷா நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளியான ‘கில்லி’ திரைப்படம் ரீ ரிலிஸ் ஆகி புது படங்களை இணையாக வசூல் வாரி குவித்து வருகிறது. அதை போல் நடிகர் அஜித்தின் சூப்பர் ஹிட் இரண்டு படங்கள் ரீ ரிலீஸ் ஆக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

   

இந்நிலையில் திரைப்படங்களைப் போலவே சூப்பர் ஹிட் ஆக  சின்னத்திரையில் ஒளிபரப்பான சீரியல்களும் ரீ ரிலீஸ் செய்ய  திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. தற்போது இதைப்பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 90 களில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த ‘மெட்டி ஒலி’ சீரியல் மீண்டும் ரீ ரிலீசாக உள்ளது.இந்த சீரியல்  ஐந்து  பெண் குழந்தைகளை பெற்ற தந்தை மகளின் திருமணத்திற்கு பிறகு அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் அடுத்தடுத்த திருப்பங்களை கதைக்களம் கொண்டு ஒளிபரப்பானது.

இந்த தொடரின் இரண்டாம் பாகம் வரும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தொடர் தற்போது  இன்று முதல் யூட்யூப் சேனலில்  ரீ ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த சீரியல் ஆனது ‘கில்லி’ படத்தை போலவே அனைத்து தரப்பினரையும் ரசிக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.