‘எதிர்நீச்சல்’ சீரியலில் நடிக்கும் முக்கிய பிரபலங்களின் மொத்த சம்பளம் இவ்வளவா?… ஒரு எபிசோடுக்கு மட்டும் இத்தனை லட்சம் பட்ஜெட்டா?… வைரலாகும் தகவல் இதோ…

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘எதிர்நீச்சல்’. இந்த சீரியல் குடும்பப் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. அதனால் பல ஆயிரக்கணக்கான இல்லத்தரசிகளை கவர்ந்துள்ளது ‘எதிர்நீச்சல்’. நாளுக்கு நாள் டிஆர்பியில் முன்னேறிக் கொண்டு வரும் எதிர்நீச்சல் சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார்.

   

கோலங்கள் சீரியலை தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதற்கு காரணம் இவர் தனது சீரியலை ரசித்து ஆத்மார்த்தமாக எடுப்பதுதான்.

இந்த சீரியல் ஆரம்பிக்கப்பட்ட கொஞ்ச நாட்களிலேயே டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி இடத்தை பிடித்துள்ளது. தற்பொழுது இந்த சீரியலில் நடிக்கும் முன்னணி நடிகைகளின் சம்பள விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஜனனி:

எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை மதுமிதா. ஏற்கனவே கன்னடத்தில் பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர். இவர் ஒரு எபிசோடுக்கு மட்டும் ரூபாய் 15,000 சம்பளமாக வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈஸ்வரி:

எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை கனிகா. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். திருமணத்தை தொடர்ந்து வெள்ளித்திரையை விட்டு விலகிய இவர், சின்ன திரையில் கால் பதித்து தற்போது எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி வருகிறார். இவர் ஒரு எபிசோடுக்கு ரூபாய் 12000 சம்பளமாக வாங்குகிறார்.

ரேணுகா:

எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தர்ஷினி. இவர் தனது சிறப்பான நடிப்பை இந்த சீரியலில் வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார். இவர் படங்களில் நடித்த பிரபலமானதை விட எதிர்நீச்சல் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பிரபலமடைந்துள்ளார். இவர் ஒரு எபிசோடுக்கு ரூபாய் 10000 சம்பளம் வாங்குகிறார்.

நந்தினி:

எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பிரபல சீரியல் நடிகை ஹரிப்பிரியா. இவர் ஏற்கனவே பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார். இவர் ஒரு எபிசோடுக்கு 15 ஆயிரம் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

கதாநாயகிகளின் இந்த சம்பள விவரம் பலரையும் வாயடைத்து போக வைத்துள்ளது. ஒரு எபிசோடுக்கு மட்டும் இந்த சீரியலுக்கு பல லட்சம் பட்ஜெட் போடப்பட்டு பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.