இந்த புகைப்படத்தில் இருப்பவர் இன்று பிரபல தொகுப்பாளினி… யார் தெரியுமா?… நீங்களே பாருங்க…

பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா தனது தங்கையுடன் எடுத்துக்கொண்ட சிறு வயது புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

90ஸ் காலகட்டத்தில் காலகட்டத்தில் இருந்தே ஆங்கரிங் செய்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தொகுபாளினி அர்ச்சனா. இவர் சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான ‘காமெடி டைம்’ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தார். அந்த நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகர் சிட்டிபாபுவுடன் இணைந்து தொகுப்பாளர் பணியை தொடங்கினார்.

   

இதை தொடர்ந்து சொர்ணமால்யா விட்டுச் சென்ற ‘இளமை புதுமை’ என்ற நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றார்.  பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரிகம’ ரியாலிட்டி ஷோவில் தொகுபாளினியாக களம் இறங்கினார்.

ஜீ தமிழில் இருந்து விஜய் டிவிக்கு வந்த அர்ச்சனா பிக் பாஸ் சீசன் 4 பங்கேற்றார். இதை தொடர்ந்து விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக வலம் வந்த இவர் மீண்டும் ஜீ தமிழுக்கு சென்று ‘சூப்பர் மாம்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டு வந்தார். சமீபத்தில் தான் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் தொகுப்பாளினி அர்ச்சனா நேற்று பிறந்தநாள் கொண்டாடிய தன்  தங்கைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிறந்த நாள் வாழ்த்துடன் இணைந்து இவர் தன் தங்கையுடன் சிறுவயதில் எடுத்துக் கொண்ட அரிய புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நம்ம அர்ச்சனவா இது? ஆள் அடையாளமே தெரியலையே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்…..